டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 65 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400 ரூபாய் 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 15 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 13 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 10 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 23 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 306.95 ரூபாயிலிருந்து 307.20 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 317.65 ரூபாயிலிருந்து 317.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாயிலிருந்து 306.13 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 316 ரூபாயிலிருந்து 317 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 308 ரூபாய் மற்றும் 317 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |