டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 87 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 29 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 378 ரூபாய் 15 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 25 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 70 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 86 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 198 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.69 ரூபாயிலிருந்து 290.76 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 301.57 ரூபாயிலிருந்து 300.60 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.24 ரூபாயிலிருந்து 289.83 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 300.50 ரூபாயிலிருந்து 299.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 293.50 ரூபாயிலிருந்து 291.50 ரூபாயாகவும் 302.50 ரூபாயிலிருந்து 300.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |