கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளது. 11 ஆண்களினதும், 10 பெண்களினதும் மரணங்களே நேற்று பதிவாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ள நிலையில்,
இன்று, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 423 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,111 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.