வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி
covid
vavuniya
death
By Vanan
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் நேற்று மரணமடைந்திருந்தார்.
அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த 52 வயதான பெண்மணிக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி