சடுதியாக வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை..!
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 694,987 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று196,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,850 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தொடர் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 708,751 ரூபாவாக காணப்பட்டது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் வரலாறு காணாத விலை உயர்வை எட்டியிருந்தது .
ஆபரணத் தங்கத்தின் விலை
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் நேற்றையதினம் 200,050 ரூபாவாக காணப்பட்டது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் 183,450 ரூபாவாக நேற்றையதினம் பதிவாகியதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,100 ரூபாவாக நேற்று பதிவாகியிருந்தது.
இதன் மூலம் ஆபரணத் தங்கத்தின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்