சட்டமா அதிபர் சர்ச்சை: அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு!
சட்டமா அதிபருடன் தொடர்ந்தும் பணியாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்லியாஸ் தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபர்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ சட்டமா அதிபர் பராபட்சத்துடன் பணியாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. எனினும், எங்களுக்க அப்படி எதுவும் தெரியவில்லை.

சட்டமா அதிபர் அவருடைய பணிகளை சீராகவே மேற்கொண்டு வருகிறார்.
அவருடைய பணிகளில் அரசாங்கத்துக்கு எவ்வித இடையூறுகளோ, பிரச்சினைகளோ இல்லை. ஆகவே, தற்போதைய சட்டமா அதிபருடன் அரசாங்கம் தொடர்ந்தும் பணியாற்றும்” என தெரிவித்தார்.
இதேவேளை, சட்டமா அதிபரை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (22.01.2026) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவைக்குள் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |