மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்!
இலங்கையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்க விலையும் நாளாந்தம் ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகிறது.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் பொழுது சற்று உயர்வடைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
அந்தவகையில், 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 178,000 ரூபாவாக உள்ளது, இது நேற்றைய விலையை விட 3000 ரூபா அதிகரித்துள்ளது.
இதவேளை, 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக உள்ளது, இது நேற்றைய விலையை விட 2800 ரூபா அதிகரித்துள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 22,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 20,475 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.