யாழில் நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்: பாடசாலைக்கு அருகில் ஏற்பட்ட பாரிய விபத்து(படங்கள்)
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அருகில் லொறியொன்றும் ஹண்டர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று(08) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் வாகனங்களின் இரு சாரதிகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, அப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 5 மணி நேரம் முன்