ஜப்பானில் இன்று பதிவான நிலநடுக்கம்! சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல்
ஜப்பானின் ககோஷிமா பிராந்தியத்தின்தெற்குத் தீவுகளில் இன்று (20) ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
உயிரிழப்புகள்
ஜப்பான், பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில், அந்நாடு கடுமையான கட்டிட விதிமுறைகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளையும் கொண்டுள்ளதால் நிலநடுக்கங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |