இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
இன்றைய நாளுக்கான (05.02.2025) நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய அமர்வுகள் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 10.30 வரை பிரதமரிடம் 04 வினாக்கள் கேட்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 11.00 முதல்11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 3.30 வரை, அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 3.30 முதல் 5.30 வரை அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |