இன்றைய நாடாளுமன்ற அமர்வு : நேரலை
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஆயுள்வேதம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறுகிறது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணிக்கு ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு, சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு மற்றும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மீளப் பெறல்) இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
முதலாம் இணைப்பு
இன்றைய தினம்(05) நாடாளுமன்றில் ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று முதல் கூடவுள்ளது.
அத்துடன் தனியார் உறுப்பினர் சட்டமூலம் உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் குறித்த இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை முதல்(06) மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 8ம் திகதி மாலை அது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.