அர்ச்சுனாவை பழி தீர்க்கின்றாரா சஜித் : தமிழ் எம்.பிக்கு நாடாளுமன்றில் இழைக்கப்படும் அநீதி

Sajith Premadasa Current Political Scenario Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran Jan 08, 2025 03:15 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை தற்போது சமூக ஊடகங்கள் உட்பட பல செய்தித்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில், இலங்கையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஆளும் கட்சியினருக்கு 60 வீதமும் எதிர்க்கட்சியினருக்கு 40 வீதமும் என்ற அடிப்படையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிட்டமையினால் அவருக்கான நேர ஒதுக்கீடு எதிர்க்கட்சியினரின் நேர ஒதுக்கீட்டில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) உரையாட எதிர்கட்சி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சென்றிருந்த போது அவர் மீது எதிர்க்கட்சியினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முறைப்பாடு அளித்த போது இது குறித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுவொன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்தும் மற்றும் தனக்கு குறித்த நேர ஒதுக்கீடு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, புதிய சபாநாயக்கரிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், புதிய சபாநாயகர் அர்ச்சுனாவிற்கான நேர ஒதுக்கீடு செய்யாமை குறித்து பதிலளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இவ்வாறான பிண்ணனியில் டிசம்பர் 18 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை எதிர்கட்சி தலைவர் இது குறித்து எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என நேற்றைய தினம் (06) தனது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரான இன்று (07) நாடாளுமன்றில் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதாவது, இன்று வரை தனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லையெனவும் இது குறித்து தனக்கு எவ்வித பதிலும் தற்போது வரை வழங்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை தற்போது வரை எதிர்க்கட்சி தலைவர் உட்பட யாரும் வழங்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும் எனக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை ஆகவே தனக்கு சரியான பதிலை பெற்றுதருமாறு அவர் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பில் எதிர்கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தோடு இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.       

 

நாடு திரும்ப துடிக்கும் தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள்!

நாடு திரும்ப துடிக்கும் தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள்!

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்