ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய மருத்துவமனை
இதேவேளை இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள பலரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருடன் சேர்த்து ஆறு பேர் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் நடைபெறுகின்றது.
இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
4 நாட்கள் முன்