இன்று முதல் அனைத்து வைத்தியசாலைகளிலும் பைஸர் தடுப்பூசி! யாருக்கு தெரியுமா?
vaccine
corona
sri lanka
pfizer
By Shalini
நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் லேடி ரிஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,
இன்று முதல் குறித்த நடவடிக்கைகள் மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் ஆரம்பமாகவுள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள சகல பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.