ஒன்றாக குவிந்த 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் - சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் என்பன நேற்று இடம்பெற்றன.
குறித்த மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் நேற்று சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று முன்தினம் வலியகோய்க்கல் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்வப்பட்டுள்ளது.
பின்னர் ஆபரண பெட்டி 18-ம் படியேறி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அதே சமயம் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி ஜோதியாக காட்சியளிப்பார்.
இதனால் சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இதில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபரிமலையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
