நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல : மாமல்லபுரத்தில் விஜய் பகிரங்கம்
"நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல; எனக்கு இருக்கும் அழுத்தம் மக்கள் படும் துயரத்தைப் பற்றியதுதான்" என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (25) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யாரிடமும் அண்டிப் பிழைப்பதற்காகவோ அல்லது அடிமையாக இருப்பதற்கோ நான் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்படும்போது அதைத் தடுக்கவே வந்துள்ளேன்.
தமிழக சட்டமன்றத் தேர்தல்
நான் அரசியலில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன், எதற்கும் ஆசைப்படாத ஒருவனால் மட்டுமே தவறுகளைத் தட்டிக் கேட்க முடியும்.

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல, அது ஒரு 'ஜனநாயகப் போர்'. எனக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, அதேபோல் உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.
ஒருங்கிணைந்து செயற்பட்டு நமது 'விசில்' சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |