பிரித்தானிய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய (United Kingdom) வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி காணப்படுவதையடுத்து, வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வரும் மூடுபனி, பல மில்லியன் பிரித்தானியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்
மூடுபனி காரணமாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை, இன்று (26) காலை 4.00 மணி முதல் 10.00 மணி வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிழக்கில் Norwich, Cambridge மற்றும் Ipswich ஆகிய பகுதிகள் தொடங்கி Middlesbrough வரை இந்த பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் பயணம்
அத்தோடு, மான்செஸ்டர், ப்ரெஸ்டன் மற்றும் பிளாக்பூல் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டும் போது பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சாரதிகள் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
