விண்ணைத்தொடும் விலை அதிகரிப்பு: 3000 ரூபாயாக அதிகரித்த எலுமிச்சை மற்றும் இஞ்சி விலை
இலங்கையில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ள நிலையில், கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் கரட்டின் விலை அதிகரித்ததை போன்று எலுமிச்சை விலையும் 3000 ரூபாவை வரை அதிகரித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு எலுமிச்சை பழம் விநியோகிக்கப்படுவதாகவும், ஆனால் முன்பைப் போன்று போதியளவு எலுமிச்சை பழம் கிடைப்பதில்லை எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
எலுமிச்சை விலை
இதனால், எலுமிச்சை பழத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |