கால நிலையில் ஏற்படும் மாற்றம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
weather
sri lanka
people
raining
By Shalini
எதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாதம் முதல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், அதிக மழைவீழ்ச்சி, காற்று காரணமாக, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட, நாட்டின் பொருளாதார வாழ்வாதாரங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதும், மீனவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இடி மின்னல் தாக்கம் குறித்தும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்