நாட்டில் நிலவும் காலநிலை: கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
கொழும்பில்(Colombo) கடும் மழை அல்லது சிறிய மழை பெய்தாலும் குறுகிய நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய 27 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன(Badrani Jayawardena) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பின் மருதானை போன்ற 27 இடங்களில் மிகவும் வேகமான முறையில் வெள்ளத்தில் மூழ்கின்றன.
பல்வேறு காரணங்களுக்காக கொழும்பு நகரில் கால்வாய்கள் மூடப்பட்டமை இந்த நிலைமையை பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கும் பல பகுதிகள்
கொழும்பு நகரின் கால்வாய்களை அண்மித்துள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் பெய்த மழையினால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |