ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி இப்ராகிம் ரைசி பயணித்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியதை அடுத்து பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணை
இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏவுகணைத் தாக்குதலால்
ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகொப்டர் முற்றாக எரிந்து அழிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தீராப்பகை உள்ள நிலையில் இந்த சந்தேகங்களை மறுக்க முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |