கடும் மழையுடனான வானிலை தொடரும் - சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை
weather
today
sri lanka
By Vanan
இலங்கையில் நிலவும் கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய வானிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும்.
எனவே மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
