தொடரும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
இலங்கையின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
இந்நிலையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொத்துவில் தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்