கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த பகுதியில் வளிமண்டல குழப்பம் காரணமாக, மழை நிலை மேலும் தொடரும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த அறிவிப்பானது இன்று முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களிலும். மீ. 100க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
முன்னெச்சரிக்கை
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
