வெளிநாடொன்றிலிருந்து தனது பிரஜைகளை உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு
ரம்ஜான் (ramadan)விடுமுறை காலத்தில் சிரியாவில்(syria) தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதால் அமெரிக்கா (us)உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள், பொது நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு
இந்த தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, வெளிநாட்டினர் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்த சமயம், சிரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம். பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை, கடத்தல், பணயக்கைதிகள் பிடிப்பு, ஆயுத மோதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், 0969-333644, +963-969-333644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
