வவுனியாவில் குளம் உடைப்பெடுத்ததால் விவசாய நிலங்கள் பாதிப்பு
Vavuniya
Sri Lanka
Climate Change
By Sathangani
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஆசிக்குளம் பகுதியில் குளமொன்று உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு
இதேவேளை குறித்த குளம் உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குளத்திலிருந்து வெளியேறும் நீரைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த குளத்தின் கீழ் 35 ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி