இலங்கையில் உறைபனி : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Dilakshan
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) பி.ப. மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில இடங்களில் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |