இலங்கையில் எகிறும் கொவிட் மரணங்கள் - வெளியான விபரம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தைச்சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.