டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கி

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 288.08 முதல் ரூ. 290.06 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 301.12 முதல் ரூ. 303.73 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமை 286.04 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன் இன்று 288.02 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது மாறாமல் 303 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கி

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 290 ரூபா மற்றும் 302 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியும் தனது நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,