டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமாக அதிகரித்த நிலையில் இந்த வாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
இன்றைய தினம் (20) டொலரொன்றின் கொள்வனவு விலை 331.71 ரூபாவாகவும், விற்பனை விலை 349.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
யூரோ ஒன்றின் பெறுமதி
அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 374.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 353.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 427.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 404.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.



புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 5 மணி நேரம் முன்
