டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 44 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபாய் 71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 385 ரூபாய் 65 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 20 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.95 ரூபாயிலிருந்து 293.21 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 304.26 ரூபாயிலிருந்து 303.14 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.98 ரூபாயிலிருந்து 292.73 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 302.25 ரூபாயிலிருந்து 302 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 294.25 ரூபாயிலிருந்து 294 ரூபாய் மற்றும் 303.25 ரூபாயிலிருந்து 303 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |