டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (19) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 87 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 86 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 60 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 197 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.40 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 306.44 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.20 ரூபாயிலிருந்து 295.70 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.50 ரூபாயிலிருந்து 305 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 296.50 ரூபாயாகவும் 305.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |