மேலும் அதிகரித்தது கொவிட் பலி -தொற்றாளர்களும் அதிகரிப்பு
covid
death
increase
By Sumithiran
இலங்கையில் மேலும் 27 கொவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றையதினம் (01) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,399 ஆகும்.
இதேவேளை, இன்று (02) 538 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 565,271 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்