ஆப்கானில் நாளை அமைகிறது தலிபான்களின் அரசு?
ஆப்கானில் நாளை தலிபான்களின் புதிய அரசு அமையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முல்லா முகம்மது அசன் அகுந்த் அரசின் தலைவராக இருப்பார் எனவும், முல்லா பராதரும், முல்லா அப்துஸ் ஸலாமும் துணைத் தலைவர்களாக இருப்பார்கள் எனவும் காபூல் உள்ளூர் ஊடகச் செய்தி வெளியாகி உள்ளது.
நாட்டின் தலைவராக பொறுப்பேற்பார் என கூறப்படும் முல்லா முகம்மது அசன் அகுந்த், தலிபான்களின் முடிவெடுக்கும் அதிகாரமிக்க அமைப்பான ரெபாரி ஷூராவின் தலைவராக கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறார்.
கடந்த முறை 1996 ல் தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது,துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
புதிய அரசில் ஹக்கானிகளின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும், தலிபான் நிறுவனரான முல்லா ஒமரின் மகன் முல்லா யாக்கூப் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.