நாளையதினம் அதிகரிக்கப்போகும் வெப்பம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாளையதினம் (15) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் எனவே மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறு
எனவே இந்த வெப்பமான காலநிலை தொடர்பில் ம்களை அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை
மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |