உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் - முதலிடத்தை பிடித்த நாடு எது தெரியுமா
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 20 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா (USA) முதலிடத்தை பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 20 நாடுகளின் தரவரிசைப் பட்டியலை Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி – பொருளாதார வலிமை, மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி
அந்தவகையில் 1 ஆவது இடத்தில் அமெரிக்காவும், 2 ஆவது இடத்தில் சீனாவும், 3 ஆவது இடத்தில் ஜேர்மனியும் , 4 ஆவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
5 ஆவது இடத்தில் ஜப்பானும், 6 ஆவது இடத்தில் பிரித்தானியாவும், 7 ஆவது இடத்தில் பிரான்ஸும், 8 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் கனடாவும், 10 ஆவது இடத்தில் பிரேஸிலும் உள்ளன.
அதேசமயம் 11 ஆவது இடத்தில் ரஸ்யாவும், 12 ஆவது இடத்தில் ஸ்பெயினும்,13 ஆவது இடத்தில் தென் கொரியாவும், 14 ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவும், 15 ஆவது இடத்தில் மெக்ஸிகோவும், 16 ஆவது இடத்தில் துருக்கியும், 17 ஆவது இடத்தில் இந்தோனேஸியாவும், 18 ஆவது இடத்தில் நெதர்லாந்தும், 19 ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும், 20 ஆவது இடத்தில் போலாந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
