தேநீரை அதிகம் விரும்பும் மக்களை கொண்ட நாடு எது தெரியுமா...!
உலகில் வாழும் மக்கள் பல்வேறு பானங்களை சுவைக்க விரும்பினாலும் தேநீருக்கு(Tea) ஒரு தனித்துவமான இடம் உள்ளது.
அத்துடன் கலாச்சாரம் முக்கியத்துவம் மற்றும் கணிசமான ஆரோக்கிய நன்மைகளை இந்த தேநீர் கொண்டுள்ளது.
அந்த வகையில், உலக மக்களின் அன்றாட நடைமுறையில் ஊடுருவி உள்ள தேநீரை அதிகம் அருந்தும் மக்களை கொண்ட 10 நாடுகளை காணலாம்.
1. துருக்கி
உலகளவில் அதிக அளவில் தேநீர் அருந்துவோர் இருக்கும் நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலிடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள 90 சதவீத மக்கள் தினமும் தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
2. பாகிஸ்தான் மற்றும் கென்யா
இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பாகிஸ்தானும், கென்யாவும் பெற்றுக்கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளில் 83 சதவீத மக்கள் , தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
3. வியட்நாம்
அதிக தேநீர் அருந்தும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 3ஆவது இடத்தில் உள்ளது. அங்குள்ள மக்களில், 80 சதவீதமானவர்கள் தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
4. இந்தியா
உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியாவில் 72 சதவீதமானவர்கள் தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
5. அயர்லாந்து
ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள அயர்லாந்திலுள்ள மக்கள்தொகையில் 69 சதவீதம் பேர், தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
6. பிரித்தானியா
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் உள்ள மக்கள்தொகையில், 59 சதவீதமானவர்கள் தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
7. ஜெர்மனி
இதேவேளை, இந்த பட்டியலில் ஜெர்மனி 7ஆவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மக்கள்தொகையில் 56 சதவீதமானவர்கள் , தேநீர் அருந்தி வருகின்றனர்.
8. அமெரிக்கா
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியை கொண்டுள்ள நாடான அமெரிக்காவில் 49 சதவீதமானவர்கள் தேனீர் அருந்துவோராக உள்ளனர்.
9. சீனா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடான சீனாவில் 45 சதவீதமானவர்கள் தேநீர் விரும்பிகளாக உள்ளனர்.
10. ஸ்பெயின்
இந்த பட்டியலில் ஸ்பெயின் 10ஆவது இடத்தை பெற்றுள்ளது. அதன்படி, அங்குள்ள 39 சதவீதமானவர்கள் தினமும் தேநீர் அருந்துவோராக உள்ளனர்.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ள தேனீர் முக்கியமாக மக்களின் கலாச்சாரப் பழக்கங்களை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |