மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
நட்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டு பெறுவார்கள்.
மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர்.
கடக ராசி
துணிச்சலோடு செயல்பட்டு காரிய வெற்றி தரும் கடகம் ராசியினருக்கு இது வெற்றிகரமான வாரம். கடந்த காலங்களில் கடைப்பிடித்த பொறுமைக்கு ஏற்ற பலன் கை மேல் வந்து சேரும் சமயம் இது.
வளர்ச்சி அடைவதில் பல தடை தாமதங்களை சந்தித்த தொழில் துறையினர், வியாபாரிகள் இனிமேல் முன்னேற்றம் பெறுவர்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, ஊதிய உயர்வுகளை பெற்று உற்சாகம் அடைவர்.
கன்னி ராசி
நண்பர்களை குடும்பத்தில் ஒருவராக நடத்தும் குணம் கொண்ட கன்னி ராசியினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி ஏற்படும்.
எதிர்பார்த்த தன வரவு கைகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் துறையிலும், வியாபாரத்திலும் தொழில் விரிவாக்க முயற்சிகளை திட்டமிட்டு, பொறுமையாக செய்ய வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் ராசி
பழகுவதில் எளிமையும், செலவு செய்வதில் சிக்கனமும் உள்ள கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
தொழில்துறையினரும், வியாபாரிகளும் இவ்வாரம் நல்ல மாற்றங்களை செய்து முன்னேற்றப் பாதையில் நடப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகுவதால், புதிய பாதையில் பயணம் செய்வர்.
இரவு முன்னதாகவே உறங்க செல்வது, மவுன விரதம் இருப்பது, முடிந்தவரை பலருக்கு அன்னதானம் அளிப்பது ஆகியவை நன்மை தரும்.
மீனம் ராசி
பிறருடைய குற்றங்களை போன்று தன்னுடைய குற்றங்களையும் அறிந்து அதை தவிர்க்க முயற்சி செய்யும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் பெற்றார் உறவினர்களோடு சுமூகமான வரவு செலவு ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், தொடர்புகள் கிடைத்து உற்சாகமாக செயல்படுவர்.
உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள், நோட்டு புத்தகம் வாங்கி தருவதால் நன்மை ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
