இடிந்து விழும் அபாயத்தில் சிறிலங்கா அதிபர் மாளிகையின் மேல் தளம்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
President of Sri lanka
By Kiruththikan
இடிந்து விழும் அபாயம்
சிறிலங்கா அதிபர் மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் பயணித்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
அதிபர் மாளிகையில் மேல் நோக்கி செல்லும் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி உடைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட மாளிகையை நேற்று அதிகாரிகளிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொல்பொருள் திணைக்களம் ஆய்வு

இதன் காரணமாக, ஆர்ப்பாட்டக்காரர்களினாலேயே அந்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், மாளிகையை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம், பல தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 11 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி