காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி...! இந்த ஒரு எண்ணெய் போதும்
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை பெறுவதற்கு கடுகு எண்ணெய் பயன்பாடும் சிறந்த தீர்வாகும்.
கறுப்பு எள் ஆம்லா எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையானவை கறுப்பு எள் விதைகள் - 2
தேக்கரண்டி ஆம்லா - 3
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 கப்

எள் ஆம்லா எண்ணெய் தயாரிக்கும் முறை
- ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் தேவையான அளவு கறுப்பு எள்ளை சேர்த்து, அதை நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
- இவ்வாறு ஊறவைப்பதன் மூலம் கறுப்பு எள்ளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்கி விடுகிறது. இப்போது ஆம்லாவை நன்றாக கலப்பான் வைத்து தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த தட்டி வைக்கப்பட்ட ஆம்லாவில் கறுப்பு எள் கலந்த எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த கலவையை, குறைந்த வெப்பநிலையில், 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலப்பதை காணலாம். பின்னர் இதை ஆறவைக்க வேண்டும்
- . பிறகு இதை நன்றாக கலக்கலாம். பின் மீண்டும் இந்த கலவையை குறைந்த வெப்பநிலையில், 2 மணிநேரத்திற்கு சூடுபடுத்தலாம். அதன் பிறகு, இதைக் குளிர்வித்து, வடிகட்டியை கொண்டு கலவையை வடிகட்ட வேண்டும். இப்போது கறுப்பு எள் கலந்த ஆம்லா ஹேர் ஆயில் தயார் செய்யப்பட்டது.
பயன்படுத்தும் முறை
கறுப்பு எள் மற்றும் ஆம்லா கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒருமுறை தலையில் தடவி வந்தாலே, ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.

இதில் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் உங்களுக்கு சேராத பட்சத்தில், அழகுப்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஜோஜேபா எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எண்ணெய் கலவையானது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், முடிகளில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரவும் உதவுகிறது. மேலும் கூந்தலை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |