ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளை வீழ்த்திய இஸ்ரேல்! நெதன்யாகு அறிவிப்பு
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த சந்திப்பில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, அவர் “இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IGRC) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொம்மை” என குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கான தருணம்
மேலும், கமேனியின் பொதுமக்கள் முன்னிலையில் கூட வெளிப்பட முடியாத நிலையில் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, ஈரான் மக்களை நோக்கி நேரடியாக உரையாற்றிய நெதன்யாகு, ஈரானில் “சுதந்திரத்தின் புதிய பாதைக்கு செல்லும் தருணம் நெருங்கி வருகிறது” என்றும், அந்த மாற்றத்திற்கு இஸ்ரேல் மக்களுடன் நிற்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |