மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
ரிஷப ராசி
உங்கள் கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இட மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

ஒருசிலர் வெளியூரில் குடியேறுவீர். சனி ஞாயிறில் புதிய முயற்சி வேண்டாம். புதனால் எதிர்பார்த்த பணம் வரும்.
வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் விலகும்.
புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். ஞாயிறு திங்களில் திட்டமிட்ட வேலை நடக்கும்.
மிதுன ராசி
நினைத்த வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.

வழக்கு சாதகமாகும். செவ்வாய்க்கிழமை முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆறாமிட சூரியன், செவ்வாயால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். யோசித்து செயல்படுவது நல்லது.
கன்னி
சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தொழிலை முன்னேற்றம் அடைய வைப்பார்.

தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளையும் செய்து முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்யம் சீராகும்.
நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்
ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் சூரியனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சட்ட சிக்கல் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ராகுவும் சனியும் பூர்வீக சொத்திலும், பிள்ளைகள் வழியாக நெருக்கடியை ஏற்படுத்துவார்.
ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். உயர் கல்வி பயிலுவோர் இந்த நேரத்தில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பது நல்லது.
தனுசு
உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். அவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும்.
ஒரு சிலர் கையிருப்பை வைத்து புதிய இடம், வீடு வாங்குவீர். ராகு, சனிபகவானால் முயற்சி வெற்றியாகும். தொழில் வியாபாரம் லாபம் தரும். வருமானம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்