மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்டம்
Jaffna
Sri Lanka Electricity Prices
By Beulah
மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று யாழில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இன்று இரவு இப் போராட்டம் நடைபெற்றது.
யாழ் நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.
நாடளாவிய போராட்டம்
இப் போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆணரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மின்சார அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இப் போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்