கனடாவில் வசித்து வந்த இருவர் அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி
கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த நைஜீரிய பிரஜைகள் இரண்டு பேர், அமெரிக்க அரசாங்கத்திடம் பாரியளவில் நிதி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வகையில், இவ்விரு நபர்களும் சுமார் 2.4 மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாய்கிரு ஓலான்ரிவாஜூ அம்பாலி மற்றும் பாய்ட்டு இஸ்மாய்லா லாவெல் ஆகியயோரே மேற்படி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தொழிலாளர்கள்
இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர்களது தகவல்களை களவாடி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவுகை ஏற்பட்ட காலத்தில், தொழில்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவு மோசடி செய்யப்பட்டுள்ளன.
நலன்புரி கொடுப்பனவு
போலியான அடிப்படையில் பலரது பெயரில் இந்த நபர்கள், நலன்புரி கொடுப்பனவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவின் 25 மாநிலங்களிலும் 13 கூகுள் கணக்குகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பணியாளர்கள் நலன்புரி கொடுப்பனவிற்கு விண்ணப்பம் செய்வது போன்று இந்த நபர்கள் விண்ணப்பித்து அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        