கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Climate Change
Canada
World
By Beulah
கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்வியாவில் வெப்பநிலை அதிகரித்துளள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை வான்கூவாரில் 13.2 பாகை செல்சியசாக இருந்ததோடு, இதற்கு முன்னர் 1997ம் ஆண்டிலேயே இவ்வாறு பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சாத்தியம்
அத்துடன், இந்த குளிர்காலத்தில் கூடுதல் அளவில் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
வழமையான பருவ காலத்திற்கு முரண்பட்ட வகையில் வெப்பநிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்