கனடாவின் ரொறன்ரோவில் துப்பாக்கிசூடு - ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் ரொறொன்ரோவின் மேற்கு முனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழன் இரவு 7:35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலுக்கமைய டொராண்டோ காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காவல்துறை வெளியிட்ட தகவல்
SHOOTING:(UPDATE)
— Toronto Police Operations (@TPSOperations) August 25, 2023
Northcliffe Blvd & St Clair Ave W
- one victim, a man, has been pronounced deceased at hospital
- 2nd victim, a woman, has non life threatening injuries
- Homicide will now be investigating
- roads remain closed while police investigate#GO1978214
^sc
காவல்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது, இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காணப்பட்டனர். ஆண் அடிவயிற்றிலும், பெண்ணின் காலிலும் சுடப்பட்டநிலையில் காணப்பட்டதாக காவல்துறை அதிகாரி அப்தெல்-மாலிக் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரையும் ரொறன்ரோ மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் யாரேனும் எதையாவது பார்த்திருந்தால்

சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர், எனினும் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, சந்தேகநபர் கால் நடையாக தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாரேனும் எதையாவது பார்த்திருந்தால், காவல்துறையை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.