கனடாவில் அடையாள மோசடி: வழங்கப்பட்டுள்ள தண்டனை!
கனடாவில் (Canada) இன்யூட் (Inuit) அடையாள மோசடி வழக்கில் டொரண்டோ (Toronto) பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் நுனாவுட் (Nunavut) நீதிபதி இன்யூட் (Inuit) பூர்வீக குடிமக்கள் அல்லாத டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
கரிமா மஞ்சி (Karima Manji) என்ற அப்பெண், இன்யூட் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி $5,000க்கும் அதிகமான மோசடி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
போலித் தகவல்
கரிமா மஞ்சி-வின் இரட்டையர் மகள்கள் இன்யூட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று போலித் தகவலை அளித்து இரண்டு நிறுவனங்களில் இருந்து சலுகைகளைப் பெற்றதற்காக இந்த தண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை பரிந்துரைத்தார்.
ஆனால், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நீதிபதி கடுமையான தண்டனையை விதித்தார். குறிப்பிடத்தக்க வகையில், மஞ்சி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரது மகள்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |