உக்ரைன் படையினருக்கு பேரதிர்ச்சி - கெர்சனில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம்
தமது படையினருக்கான விநியோகத்தை மேற்கொள்வதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை நீடித்து வருவதாக தெரிவித்து ஆக்கிரமித்த கெர்சன் நகரிலிருந்து ரஷ்யா தனது படைகளை வெளியேற்றி இருந்தது.
இந்த நிலையில் மீளவும் கெர்சன் நகரம் உக்ரைன் படைகள் வசம் சென்றுள்ளது. இவ்வாறு மீளவும் கெர்சன் நகருக்குள் பிரவேசித்த உக்ரைன் படையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சித்திரவதை அறைக்கூடம்
அது என்னவெனில் ரஷ்ய படையினரின் சித்திரவதை அறைக்கூடமே ஆகும். ரஷ்ய துருப்புகளிடம் இருந்து Mykolaiv, கெர்சன் கைப்பற்றப்பட்ட பிறகு, உக்ரைனிய வீரர்கள் ஒரு சித்திரவதை அறையை கண்டுபிடித்தனர்.
புடினின் ஆதரவாளர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் என்று கூறுவதற்கான சமீபத்திய ஆதாரம் இது என்று கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளும், ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது கெர்சன் பகுதியில் வசித்த பொதுமக்களுடையது என்று உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெகுசன புதைகுழிகள்
இதற்கிடையில், 'ரஷ்ய இராணுவத்திடம் இருந்து ஒவ்வொரு முறையும் எங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும்போது, சித்திரவதை அறைகள் மற்றும் வெகுசன புதைகுழிகள், ரஷ்ய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடல்கள் இருப்பதைக் காண்கிறோம்' என உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இப்படிப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதல்ல. ஆனால், ஒவ்வொரு போரும் அரசியல் தந்திரத்துடன் தான் முடிகிறது என்றும், ரஷ்யா நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையை அணுக வேண்டும் என்றும் நான் கூறினேன்' எனவும் தெரிவித்தார்.