இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
weather
sri lanka
death
By Shalini
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரை 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்