படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒக்டோபரில் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு
2026 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் 192.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது செப்டெம்பர் மாதம் பதிவான 185.6 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 3.8 சதவீத அதிகரிப்பாகும்.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மில்லியன் டொலர்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

எனினும், 2026 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான முதல் பத்து மாதங்களில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 2,437.9 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 2,659 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 8.3 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |